அனைத்து மாணவர்களுக்கும் கல்வி பயிலும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அநாதை இல்லங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளில் இணைந்து கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி 38:2019 இலக்க சுற்றறிக்கையின் ஊடாக அனைத்து தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் சிறுவர்களை ஏனைய மாணவர்களுடன் சமமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சிறுவர்களை இடைநிலை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் போது அநாதை இல்லத்தின் பொறுப்பாளரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பரிசீலனை செய்து கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலைக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment