Ads (728x90)

அதிகாரம் கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும் மக்களோடு மக்களாகவே   வாழ்வேன். எவரும்   சந்தேகம் கொள்ள வேண்டாம். அரச சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஆட்சிக்கு வர முனையவில்லை.  இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நானே போட்டியிடுவேன் என மாத்தறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி   பிரேமதாஸ  ரணசிங்க  மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து மக்களுக்காக உயிர் தியாகம் செய்தார். அந்நிலையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். அரச சுகபோகங்களை துறந்து மக்களுக்களுக்கு முழுமையாக சேவையாற்றுவேன். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நானே களமிறங்குவேன் நாட்டு மக்கள் அதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget