வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் தொடராக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி உதவியினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஈ. சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment