முல்லைத்தீவு, பனிக்கன்குளம் பகுதியில் ஐம்பது நிரந்தர வீடுகள் அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வீடுகளை பெற்றுக் கொண்ட அரச ஊழியர்கள் நிரந்தர வீடுகளில் குடியேறாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டங்களுக்கு உள்வாங்கப்படாத பனிக்கன்குளம் பிரதேச மக்களுக்கு குறித்த வீடுகளை வழங்குவதற்கான பதிவுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நிரந்தர வீடுகளில் குடியேறாதவர்கள் தொடர்பான விவரங்களை, பிரதேச செயலகங்கள் மூலம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment