Ads (728x90)

இலங்கை ஆசிரியர் சேவையிலுள்ள 2,80,000 ஆசிரியர்களில் 10 சதவீதமான அசிரியர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரியவந்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவர்கள் பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்விப் போதனைகளுடன் மட்டும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது. பாடசாலையின் மாணவர்கள் குறித்த பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். மாணவர்கள் நவீன தொழிநுட்பத்தை நோக்கி செல்கின்றபோது ஏற்படும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரியரின் அறிவு கூர்மைபடுத்தப்பட வேண்டியது அவசியம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் 1,400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget