நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் பிரேரணைக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இன்றைய அமைச்சரவை கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்தது.
இன்றைய விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பல அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஜனாதிபதி அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியள்ள இந்த நேரத்தில் நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல என அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment