மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்து விட்டு இலங்கை திரும்பியவர்கள் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மனித உரிமை பேரவையின் அமர்வுகள் மற்றும் பக்கநிகழ்வுகளின் போது பல குழுக்கள் மரண அச்சுறுத்தலை விடுப்பதாகவும் அறிக்கைகள் கிடைத்துள்ளன.
காணாமல்போன தனது கணவரை தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சந்தியா எக்னலிகொட இணையம் மூலமும் ஏனைய வழிகளிலும் அச்சுறுத்தப்படுவது குறித்து 2018 ஆகஸ்ட் 2 ம் திகதி விசேட அறிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மனித உரிமை பேரவையின் அமர்வில் கலந்து கொண்டமைக்காக சிவில் சமூக பிரதிநிதிகள் தாங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், தங்களிற்கு கொலை மிரட்டல்கள் உட்பட அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் என ஐ.நா செயலாளர் நாயகம் கவலை தெரிவித்துள்ளார்.
Post a Comment