Ads (728x90)

அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான சுற்றுநிருபத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிர்வாக 25/2014, 25/2014/01 இலக்க சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போனதன் காரணமாக நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத ஊழியர்களுக்கு குறித்த நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்ட பின்னர் தேவையின் நிமித்தம் இணைத்துக்கொள்ளப்பட்டு 2019.09.01 தினத்தன்று 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யும் நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget