ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் திகதியாகவும், ஒக்டோபர் 07 ஆம் திகதி அதற்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் திகதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதவியிலுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவுறுதவற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென, அரசியலமைப்பின் 31 ஆம் உறுப்புரையின் (3) ஆம் பிரிவுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment