கண்டி பல்லேகல மைதானத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த முதலாவது 20-20 கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
97 விக்கெட்டுக்களை மாத்திரம் இதுவரை பெற்றிருந்த மலிங்க இன்றைய ஆட்டத்தில் கொலின் முன்ரோ மற்றும் கிரேண்ட்ஹோம் ஆகியோரை ஆட்டமிழக்க வைத்ததன் மூலம் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
சர்வதேச 20-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பட்டியலில் லசித் மலிங்க 99 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணியின் ஸஹித் அப்ரிடி 98 விக்கெட்டுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் அணியின் சஹிப் அல்ஹசன் 88 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment