இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் டெஸ்ட் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய 20 - 20 தொடரின் முதல் போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.
175 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 19.3 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி நாளை மறுதினம் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment