Ads (728x90)

யாழ். மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் மீளப்பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு காணி உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget