Ads (728x90)

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின்றி திருத்தச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான இயலுமை ஜனாதிபதிக்கு இல்லை என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு அறிவித்துள்ளது.

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை இன்றி தேர்தலை நடத்துவதற்குரிய இயலுமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி கோரியிருந்தார்.

இந்த விண்ணப்பம் குறித்து பிரதம நீதியரசர் தலமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவினால் கடந்த 28 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை திருத்த சட்டத்தினூடாக பழைய முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget