ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் அருந்தாமல் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைஞசலி நிகழ்வு இன்று மிகவும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொதுச் சடரினினை மாவீரர் தேவானந்தனின் தாயார் ஏற்றிவைக்க, தியாகி திலீபனின் உருவப் படத்துக்கான தியாகச் சுடரை மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் மிகவும் உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment