பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகிவிட்டாரா என்று பதட்டப்பட வேண்டாம். இது தெலுங்கு பிக் பாஸ் 3 பற்றிய செய்தி. தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த நாகார்ஜுனா அவருடைய 60வது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் ஸ்பெயின் நாட்டில் கொண்டாடி வருகிறார்.அவர் இன்னும் நாடு திரும்பாத காரணத்தால் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். நேற்று இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி சிவகாமி கெட்டப்பில் அசத்தலாக நுழைந்தார். அவரது வருகை வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
நாகார்ஜுனாவும் வீடியோ காலிங் மூலம் ரம்யாவுடன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தனக்குப் பதிலாக ரம்யா தொகுத்து வழங்கட்டும் என சிபாரிசு செய்தாராம். ரம்யாவும் நேற்றைய நிகழ்ச்சியை சுவாரசியமாகவே தொகுத்து வழங்கினார்.
Post a Comment