காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூபா 6,000 இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு பாதிப்புக்குள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment