கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையில் ஸ்ரீதேவி கடுகதி ரயில் இன்று முதல் சேவையில் ஈடுபட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
4003 என்ற இலக்கம் கொண்ட இந்த ரயில் இன்று அதிகாலை 3.55 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.14 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தை சென்றடையும் இந்த ரயில் இரவு 10.16 மணிக்கு காங்கேசந்துறையை சென்றடையும்.
குறித்த ரயில் பொல்கஹவெல, குருநாகல், மாஹோ, கல்கமுவ, தம்புத்தேகம, அநுராதபுர புதிய நகரம், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, அறிவியல் நகர், கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.
இதே போன்று 4004 என்ற இலக்க ரயில் நாளை அதிகாலை 3.45 மணிக்கு காங்கேசந்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தை 5.49 மணிக்கு வந்தடையும் இந்த ரயில் முற்பகல்10.24 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
4003 மற்றும் 4004 இலக்கங்களைக் கொண்ட ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரையில் இதுவரையில் சேவையில் ஈடுபட்டிருந்த ரயில்களே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment