ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெல்வது நிச்சயம். ஏனைய கட்சிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடிக்கக்கூடிய வல்லமை கோத்தபாயவுக்கு உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியடைவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே எமது கட்சி இத்தேர்தலில் இலகுவாக வெற்றியடையும். ஐ.தே.கவை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. மோசடியால் நாட்டையே ஐ.தே.க. நாசமாக்கிவிட்டது. எனவே தேர்தலில் நாம் வென்று நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment