Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சிக்கு நேற்று காலை விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச நாட்டின் அனைத்து இன மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்து, தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் வல்லமை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பந்தை ஒவ்வொரு பக்கமாக மாற்றி மாற்றி காலத்தை வீணடிக்காமல், அனைத்து இன, மத தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலம், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்

தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கும் தீர்வு திட்டத்தை தென்பகுதி சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கும் வேட்பாளருக்கே தமது ஆதரவு கிடைக்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிளவுபடாத நாட்டில் அதிகூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவதே, 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட யோசனை ஆகும். இது தமிழர் தரப்பிற்கும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. எனவே அப்போதைய நிலைப்பாடே தற்போதும் உள்ளதென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget