கோதுமை மா நிறுவனங்கள் முன்னர் இருந்த விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சருடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை முன்னர் இருந்த விலைக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சருடனான வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது அனைத்து கோதுமை மா நிறுவனங்களும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்களை 3 வாரத்திற்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment