Ads (728x90)

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு ஊரெழுப் பகுதியில் பொக்கணை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த மாதிரிக் கிராமத்தை இன்று வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா திறந்து வைத்து வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தில் 274 ஆவது திட்டமாக யாழ்.ஊரெழுப் பகுதியில் அமைக்கப்பட்ட 19 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன் போது வீட்டு திட்டத்தை திறந்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாசா வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுப் பத்திரங்களையும் வழங்கி வைத்தார். பயனாளிகளிற்கு வீட்டு உபகரணங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget