Ads (728x90)

இங்கிலாந்து உயர்கல்விக்காக நாட்டிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வியின் பின்னர் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் புதிய நடைமுறையை 2020 இலிருந்து அறிமுகப்படுத்துகிறது.
புதிய பட்டதாரி குடிவரவு வழி பற்றிய தகவல்களை இலங்கையர்களும் பயன்படுத்தலாம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம் இங்கிலாந்தில் தங்கள் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்களின் கல்வியை நிறைவு செய்த பின்னர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் தங்குவதற்கும், வேலை செய்வதற்கும் அனுமதிக்கின்றது.

அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி வழங்குநரிடம் இளங்கலை மட்டத்தில் அல்லது அதற்கு மேல் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அனைத்து மாணவர்களும் இந்த புதிய சலுகையை அனுபவிக்கலாம். இந்த திட்டம் 2020 – 2021 கல்வியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும்.

இங்கிலாந்து மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு குறித்து நாம் வைக்கும் மதிப்பை இத்திட்டம் நிரூபிக்கிறது என பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget