Ads (728x90)

சவுதி அரேபியா அரசிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் குதங்களின் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்கேயக் மற்றும் குரைஸ் மாகாணங்களில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களிலேயே இத்தாக்குதல் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து குறித்த இடத்தில் தீப்பிழம்பு தோன்றியுள்ளதுள்ளதோடு, புகைமண்டலமாக காட்சியளிப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இருப்பினும்  தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சவுதி உள்துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் குதங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

யேமனில் தாக்குதல்கள் தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget