Ads (728x90)

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் என்று பெயரிடப்பட உள்ளதாக தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழியினுடனான சந்திப்பின்போது  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய பயணிகள் இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண இருதரப்புப் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget