கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பினை நடத்தி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை தான் நேற்றைய தினம் கையளித்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று காலை முக்கிய ஊடக சந்திப்பொன்றினை அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் நடத்தியிருந்தார். இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விடயம் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்டுமாறும் சஜித் இதன்போது கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பான கடிதம் ஒன்றை தான் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இதற்கான பதில் இதுவரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment