Ads (728x90)

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இங்கு சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து இன்று காலை முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை முன்பாக ஒன்று திரளும் மக்கள், பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அரசிற்கான மகஜர் மாவட்ட செயலரிடம் வழங்கப்படவுள்ளதோடு, ஐ.நா சபைக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை இன்று வடமாகாணம் தழுவியரீதியில் பணிப்புறக்கணிப்பும் இடம்பெறவுள்ளது. வடக்கு சட்டத்தரணிகளும் இன்று முல்லைத்தீவு கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுகிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget