நீதிமன்றின் உத்தரவை மீறி நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கேணியில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் இணைந்து ஆலயத்துக்கு சொந்தமான கேணியில் உயிரிழந்த பிக்குவின் உடலத்தை நீதிமன்றின் தீர்ப்பையும் மதிக்காது நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான புராதன தீர்த்த கேணியில் தகனம் செய்துள்ளனர்.
நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் உடலத்தை நீதிமன்று காட்டிய இடத்துக்கு புறம்பான இடத்தில் எரிப்பதனை வேடிக்கை பார்த்ததோடு தகனம் முடியும் வரை பூரண பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர்.
மேலும் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்ற சட்டதரணிகள் மீதும் பௌத்த பிக்குகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டதரணிகள் அனைவரும் இடை நேரத்துடன் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர் . இதன் விளைவாக நீதிமன்றின் பணிகள் மதியத்துடன் கைவிடப்பட்டன.
சட்டதரணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட போவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர். பௌத்த பிக்குகளினால் தாக்கப்பட்ட சட்டத்தரணிகள் சற்று முன்னர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment