Ads (728x90)

என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அரச வங்கிகளில் 15 இலட்சம் ரூபாய் வரை கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை அவசியமில்லை என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் போது, இந்தத்திட்டத்தின் ஊடாகக் கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை கோரப்படுவதாகவும், பிணையாளர்களைத் தேடுவதற்குத் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் விதவைகளுக்குக் கடன் வழங்குவதில் அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று பிணையாளர்கள் இருவரைக் கோருவதிலிருந்து விலக்களிக்குமாறும், முன்னாள் போராளிகளுக்கும் பிணையாளர்கள் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள காணாமற் போனவர் தொடர்பான இல்லாமை சான்றிதழை சமர்பிக்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget