Ads (728x90)

2009 இல் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்கு வந்த, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே எனது வாழ்வில் முக்கியமான நாளாகும். சமாதான பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளிற்கு நல்ல வாய்ப்புக்கள் வந்தன. ஆனால் அவர்கள் மக்களை கொன்றார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்கம அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இப்படி தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர்களோ, ஏனைய துறைசார் வல்லுனர்களோ நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது. இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்க கூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget