Ads (728x90)

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வட மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளை அமைச்சர் நேற்று பார்வையிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி அளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும். விமான சேவைகள் உத்தியோகபூர்வமாக ஒக்ரோபர் 15ந்திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பான மதிப்பீட்டுக்குழு கூட்டத்திலும் அவர் கலந்து கொண் டார்.

கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்ட வலயமாக சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.                         


Post a Comment

Recent News

Recent Posts Widget