Ads (728x90)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை நியூஸிலந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 125 ஓட்டங்களை குவித்தது.

126 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி மலிங்க மற்றும் அகில தனஞ்சயவின் பந்துப் பரிமாற்றங்களினால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இறுதியாக 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 37 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் மலிங்க 6 ஓட்டங்களிற்கு 5 விக்கெட், தனஞ்ஜெய 2, சன்டகன், ஹசரன்க தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர். மலிங்க ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget