யாழ். பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அரசியல்ரீதியான வேலைவாய்ப்பை நிறுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று பேரணியொன்றையும் நடாத்தியுள்ளனர்.
இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பரமேஸ்வரா சந்திவரை சென்று பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் பலாலி வீதி போக்குவரத்தில் தடை ஏற்பட்டமையால் மக்கள் அசௌகரித்திற்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment