Ads (728x90)

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை விதித்திருந்தது.

இதேவேளை உயர்நீதிமன்றம் இடமளித்தால் தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒரு மரண தண்டனையாவது நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எனினும் இடைக்கால தடை உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஜனதிபதி மைத்ரிபால சிறிசேனவின் காலப்பகுதிக்குள் மரண தண்டனை நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget