Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்தில் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் இந்த சாட்சி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த சாட்சி விசாரணைகளை பொதுமக்களுக்கு மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget