
நேற்று மாலை தொலைபேசி ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்புச் செய்துள்ளார்.
இதனையடுத்து, அத்துரலிய ரத்ன தேரர், உதய கம்மம்பில, விமல் வீரவங்ச ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதனையடுத்தே ஜனாதிபதி நிதி அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment