Ads (728x90)

கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும்.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம். எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில் தட்டச்சு செய்து விடலாம்.

தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம். தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை. எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகளை நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகின்றது.

இதற்கு செய்ய வேண்டியது,
Google Play Store செல்லவும். Gboard app என டைப் செய்து download செய்யவும். Input language ல் தமிழை செலக்ட் செய்ய வேண்டும். அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும். வட்ஸ் ஆப் போகவும். வழக்கம் போல இருக்கும் கீபோர்ட், சற்றே வித்தியாசமாகத் தெரியும். தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும். Keyboard மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும். அதில் பேசக்கூடாது. அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே, கருப்புக் கலரில் சின்ன மைக் இருக்கும். Just அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம். speak now என வரும். நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மிக முக்கியமாக தூய தமிழில் பேச வேண்டும்.

செய்தி வாசிப்பாளர்களைப் போல தெளிவாகப் பேசினால், வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget