தேச நிர்மாண வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி, பிடித்து வைத்தல் வரி, வரவு வரி ஆகியவையே உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன் கட்டுமான வருமான வரி 28 முதல் 14 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது, வற் வரி டிசம்பர் 1ம் திகதியிலிருந்து 15 % இல் இருந்து 8 % ஆக குறைக்கப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் மீதான அனைத்து வரிகளும் இரத்து செய்யப்படுகின்றன, தொலைத்தொடர்பு கட்டணங்கள் 25% குறைக்கப்படுகிறது.
தோட்டத் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் அனைத்திற்கும் வரி விலக்கு, 1 மில்லியனாக இருந்த நிறுவத்திற்கான வருமான வரி செலுத்துவதற்கான குறைந்த பட்ச தொகை 25 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கான வரி நீக்கம் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார புத்துயிரூட்டல் என்ற தொனிப்பொருளில் உடனடியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அதற்காக வரிகளில் சீர்திருத்தங்ளை செய்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

Post a Comment