Ads (728x90)

பாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி மற்றும் டெப் வழங்குதல் ஆகிய செயற்றிட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget