முன்னாள் ஜனாதிபதிகள் ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளின் அடிப்படையில், இனப்பிரச்சனை தீர்வு முயற்சி மேற்கொள்ளப்படும் என சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் தாய்நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் என்பவற்றை பாதுகாப்போம். பிளவுபடாத, பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு அமுல்படுத்தப்படும்.
அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் மாறும். வீணடிப்புக்கள் குறைக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் சட்டத்திலும், நடைமுறையிலும் மட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களிடையேயும் உண்மையான ஒற்றுமை உருவாகுவதையும் உறுதிப்படுத்தும் என நேற்று வெளியான தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மாகாணங்களின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல்கள் ஜனாதிபதிகள் சந்திரிகா, ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.
மத்தியில் அதிகார பகிர்வை உறுதி செய்யவும், மத்தியும், மாகணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாகாணசபையின் பிரதிநிதிகளை கொண்ட செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேமதாச காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிகா காலத்தின் தீர்வுப்பொதி, மஹிந்த காலத்தில் திஸ்ஸவிதாரண அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment