Ads (728x90)

ஜனாதிபதி தேர்தலுக்கான ‘அமைதியான காலகட்டத்தில்’ பணம் செலுத்திய அரசியல் விளம்பரங்களை தனது சமூக ஊடக பயனாளர்களிற்கு காண்பிப்பதை நிறுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் பவ்ரல் அமைப்பு கோரியுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவு முதல் முடிவடையவுள்ள நிலையில், நள்ளிரவு முதல் பேஸ்புக் நிறுவனமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமென பவ்ரல் கோரியுள்ளது.

சமூக ஊடக தளங்களில் அரசியல் விளம்பரங்கள் தங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்த மக்களின் சுயாதீனமான முடிவுகளை பாதிக்கின்றன என்று பவ்ரல் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ‘அமைதியான காலம்’ இன்று நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை நடைமுறைக்கு வரும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget