அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு விடுத்துள்ளது. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு அறிவுறுத்திய உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மத்திய மாகாண கீர்த்தி தென்னகோன், கிழக்கு ஆளுனர் ஷான் விஜேலால் டி சில்வா, வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுனர் பேஷால ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க, தென் மாகாண ஆளுனர் ஹேமால் குணசேகர, ஊவா ஆளுனர் மைத்திரி குணரத்தின மற்றும் மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில் ஆகியோருக்கே இவ்வாறு பதவி விலகுமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment