ரணில் உடனடியாக கட்சித் தலைமையில் இருந்து விலகி, தலைமைப்பதவியை தன்னிடம் ஒப்படைக்கா விட்டால் அதுவரை செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும், பலரும் கூறுவதைப் போல தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தனக்கில்லையென்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின்போது சஜித் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
தேர்தல் பிரசாரக் காலத்தில் நான் சகலரையும் நம்பினேன். எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் செய்தது. எனக்கு உரிய பணத்தை கட்சி வழங்கவில்லை. நான் தற் போது கடனாளியாகியுள்ளேன். தேர்தல் பிரசாரத்திற்கு பணமின்மையால் நெருக்கடிகளை எதிர்கொண்டேன்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், கட்சி பிரமுகர்கள் மற்றும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பிற்கும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிற்கும் ரணில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த சந்திப்புக்களில் சஜித் கலந்து கொள்ளவில்லை.
அவரை கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல கட்சியின் மூத்த பிரமுகர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே சஜித் தனது உறுதியான நிலைப்பாட்டை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும், ரணில் பதவி விலக வேண்டுமென சஜித் தரப்பு எம்.பிக்கள் விடாப்பிடியாக நின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment