Ads (728x90)

இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கவனத்தில் கொள்ளுகையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது. தனி நபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பான கோத்தாபயவின் கொள்கைகள் நகைப்பிற்குரியதாகும் எனவும் சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாட்டில் நேற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஏழு தடவை கட்சி தாவியவர் எமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார். அதனை எதிர்க்கொள்ள தயாராவே உள்ளேன். சுதந்திர கட்சியை திட்டமிட்டு மஹிந்த ராஜபக்ஷ அழிக்க முயற்சிக்கையில் அதற்கு சாதமான சூழலை 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் மைத்திரி ஏற்படுத்திக் கொடுத்தார். மொட்டுடன் கூட்டணி அமைத்தமை கட்சியின் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு அரசியல் ரீதியிலும்,  பொது மக்களின்  வாழ்வியல் ரீதியிலும் தீர்மானங்களை முன்னெடுக்கும் தீர்க்கமான தருணத்தில் தற்போது உள்ளது.  இரண்டு பிரதான   ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை  பிரகடனத்தில்  பல்வேறு  விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளேன். 
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள  தேர்தல் கொள்கை பிரகடனத்தில் மனித உரிமைகளுக்கும்,  மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டு உள்ளமை   பெரும் நகைப்பிற்குரியதாக காணப்படுகின்றது.

10 வருட கால குடும்ப ஆட்சியில் மனித உரிமைகளும், மக்களின் பாதுகாப்பும் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை. சிலர் தங்களின் சுயநல அரசியல்  தேவைகளுக்காக இன்று  பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள்.

எனக்கும் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட  சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிராக   சுதந்திர கட்சியின் தலைவர் அல்ல பொதுச்செயலாளருக்கு கூட  ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. ஒருவேளை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை சட்டத்தின் ஊடாகவே வெற்றிக் கொள்வேன் ஒருபோதும் குறுக்கு வழியில் செல்லமாட்டேன் என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget