பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகத் தெரிவித்திருக்கும் சுயாதீன சோதிடர்கள் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இத்தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இங்கு கருத்துத் தெரிவித்த பிரபல சோதிடர் கே. ஏ. யூ சரத்சந்திர, சுயாதீன சோதிடர்களான தங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமையைப் தடுக்கும் விதத்தில் விமல் விரவன்ச, உதய கம்மன்பில போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீது பழி சுமத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் வாரப்பத்திரிகையொன்றில் பிரசுரமான சோதிடர் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவார் என்று விஞ்ஞானபூர்வமாக கருத்து வெளியிட்டதை விமர்சித்திருக்கும் வீரவன்ச, கம்மன்பில போன்றோர் இதற்காக நாம் ஒரு கோடி ரூபா வீதம் பெற்றுக் கொண்டதாகப் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இந்த உண்மைக்குப் புறம்பான கருத்து சோதிடர்களான எம்மை அவமானப்படுத்துவதாகும். இது தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment