பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் 11 அமர்வுகளாக நடைபெறவுள்ள பொதுப்பட்ட மளிப்பு விழாவில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்டப் பின்படிப்பு பட்டதாரிகளுக்கும், 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும் 348 வெளிவாரி பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கான பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவும் உள்ளன என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Post a Comment