இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்விசார் மற்றும் உடனடி பணிகளை நிறைவேற்றுவதற்காக கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், விசேட குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் வழங்கும் செயன்முறையை தொடர்ந்தும் செயற்படுவத்துவதற்கு கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 2020 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்களை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment