அதற்கிடையில் மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம்
அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர். இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.


Post a Comment