டாக்டர் சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015 ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார். அவரது விடாமுயற்சி, கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில், மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் Transparency Sri Lanka அமைப்பு “Integrity Icon – நேர்மையின் அபிஷேகம்” எனும் தலைப்பில் மக்களுக்கும், நாட்டுக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுகின்ற அரச அதிகாரிகளை மக்களுக்கு வெளிப்படுத்தவும் அவர்களை கௌரவிப்பதற்குமான ஓர் செயற்திட்டத்தினை மேற்கொண்டது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் இருந்து அரச அதிகாரிகள் பலர் தேர்தெடுக்கப்பட்டு அவர்களின் செயற்திறன்கள், ஆளுமைகள், அவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றினை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களின் வாக்குகள் மூலம் அவர்களில் ஒருவர் முதல்நிலையாக தெரிவு செய்யப்பட்டனர்.
வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்ற மத்துகம புனித மேரிஸ் கல்லூரியின் அதிபர் பிரியதர்ஷனி, நேர்மையான அரச சேவையாளர் 2019 வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இரண்டாமிடம் பிடித்தார்.
நான்கு பேர் விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, இலங்கை சுங்க மத்திய புலனாய்வு பணியகத்தின் உதவி கண்காணிப்பாளர் எ.எஸ்.அமரசிங்க, கடலோர பாதுகாப்புத் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பி.கே.பி.சந்திரகீர்த்தி, திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment