Ads (728x90)

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டதை தொடர்ந்து அவரை சிறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2016ம் ஆண்டு இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய பத்தரமுல்லை பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரை கைது செய்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதுடன், இரவு 10 மணியளவில் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சபாநாயகரோ அல்லது நீதிமன்றத்தினதோ அனுமதியின்றி தான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்ய முயற்சித்த சந்தர்ப்பத்தில் அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget