ஈரானிய ஏவுகணை தாக்குதலிலேயே உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்டதாக சான்றுகள் சுட்டிக்காட்டுவதாகவும், இந்த தாக்குதல் தற்செயலாக நடந்திருக்கலாம் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய உளவுத்துறை அந்த தகவலை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.
எங்கள் உளவுத்துறை உட்பட பல ஆதாரங்களில் இருந்து இந்த தகவலை உறுதி செய்தோம். ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது தற்செயலாக நடந்திருக்கலாம் என ஒட்டவாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியுள்ளார்.
முன்னதாக ஈரானிய விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்தை சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்த 176 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அது தொழில்நுட்ப பிழையாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இது தற்செயலாக நடந்திருக்கலாம் என்று கூறினார்.
எனினும் ஈரான் அந்த அறிக்கைகளை நியாயமற்ற வதந்திகள் என்று நிராகரித்தது. ஈரானிய புலனாய்வாளர்கள் வியாழக்கிழமை ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டனர். விமானம் தீப்பிடித்தது மற்றும் திரும்பிச் செல்ல முயன்றது. ஆனால் அதன் குழுவினர் ஒருபோதும் உதவிக்காக வானொலி அழைப்பு விடுக்கவில்லை என குறிப்பிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment